ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புத்தம் புது 100 ரூபாய்.. கைகளை தூக்கி வணக்கம்.. புத்தாண்டில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்!

புத்தம் புது 100 ரூபாய்.. கைகளை தூக்கி வணக்கம்.. புத்தாண்டில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்!

விஜயகாந்த்

விஜயகாந்த்

புத்தாண்டை முன்னிட்டு சென்னையிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியினரை சந்தித்து விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். கட்சி பணிகளை பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். அவ்வப்போது பிரபலங்கள் விஜயகாந்தை சந்திக்கும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்தது. விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் விரைவில் வருவார், மீண்டும் வழக்கம் போல தீவிர அரசியலில் ஈடுபடுவார் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தில் கட்சியினரை சந்தித்து விஜயகாந்த் வாழ்த்து தெரிவிப்பதோடு, ரூ.100 தாளையும் வழங்குவது வழக்கம். அதனை அவருடன் எடுத்த புகைப்படம் போல தொண்டர்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பர். உடல்நிலை காரணமாக இந்த வருடம் தொண்டர்களை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும்,  இன்று காலை சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் விஜயகாந்த். முகக்கவசம் அணிந்து நாற்காலியில் அமர்ந்தபடி தொண்டர்களுக்கு கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர், தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரேமலதா விஜயகாந்த் மூலம் புத்தம் புதிய நூறு ரூபாய் தாளை வழங்கினார்.

முன்னதாக விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து நடிகர்கள் சத்யராஜ், தியாகு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

First published:

Tags: DMDK, New Year 2023, Vijayakanth