2021 தேர்தலுக்கு தயாராவோம்... விஜயகாந்த் தலைமையில் ஆட்சியே நோக்கம்..! பிரேமலதா பேச்சு

விஜய காந்த் | பிரேமலதா

 • News18
 • Last Updated :
 • Share this:
  விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளார்.

  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி அக்கட்சி சார்பில் இன்று நடைபெற்றது.

  கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரேமலதா, “தொண்டர்கள் தான் எங்கள் குடும்பம். எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணி தான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

  கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாங்கள் மீண்டு எழுவோம்

  2021-ம் ஆண்டு தேர்தலுக்கு கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வார்.
  2021 -ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக வரும்.

  விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம்.  கூட்டணியா அல்லது கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோமா என்பதை உரிய நேரத்தில் தலைவர் அறிவிப்பார்” என்று கூறினார்.

  விஜயகாந்த் பேசுகையில் தான் மீண்டும் வருவேன், மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன் என்று கூறினார்.
  Published by:Sankar
  First published: