உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனை சென்றுள்ளார் எனவும் அவர் ஒரு சில நாட்களில் வீட்டிற்கு திரும்புவார் எனவும் தேமுதிக தலைமைக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் அடைந்தார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் காரில் கை அசைத்தபடியே மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.