உடல்நலக்குறைவு - தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு - தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்.

 • Share this:
  தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைபாடு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னையிலுள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அவரது மனைவி பிரமேலதாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

  பின்னர், கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்த நிலையில், அக்டோபர் 2-ம் தேதி விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இந்தநிலையில், மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  முன்னதாக, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
  Published by:Karthick S
  First published:

  சிறந்த கதைகள்