Home /News /tamil-nadu /

திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகிகள் - முதல்வர் முன்னிலையில் இணைப்பு விழா!

திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகிகள் - முதல்வர் முன்னிலையில் இணைப்பு விழா!

DMDK Chief Vijayakanth

DMDK Chief Vijayakanth

தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார் என விஜய பிரபாகரன் கடந்த வாரம் பாராட்டு தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்
தே.மு.தி.க.வைச் சேர்ந்த திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால், மாநில மாணவர் அணிச் செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார் தலைமையில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த மருங்காபுரி ஒன்றிய கவுன்சிலர், ஒன்றியச் செயலாளர் வி.சரவணன் (எ) பொன்னையா, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சி.சந்திரலிங்கம், மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் எம். நூர்முகமது, பொதுக்குழு உறுப்பினர் ஏ.எம்.அருண்பிரசாத், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்கள் ஜி.மோகன், பி.பரமசிவம், மணப்பாறை நகர வழக்கறிஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஜெயகாளிமுத்து, கலிங்கப்பட்டி 3வது வார்டு எஸ்.சத்திய சிவசக்திவேல் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்நிகழ்வின் போது திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், திருச்சி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read: கடிதம் எழுதிய 6ம் வகுப்பு மாணவிக்கு போன் செய்த முதல்வர் ஸ்டாலின்!

திமுக - தேமுதிக கூட்டணி:

இதனிடையே கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் திமுக கூட்டணி குறித்து காலம் தான் பாதில் சொல்லும் என தெரிவித்திருந்தார்.

விஜய பிரபாகரன் பேசுகையில், “தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது. வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என்று தெரிவித்தார்.

Also Read:   இந்தியாவின் மிகவும் பழமையான புத்தகக் கடைகள்!

தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம் என்று குறிப்பிட்ட அவர்,  திமுகவின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார் என விஜய பிரபாகரன் பாராட்டு தெரிவித்தார்.

 
Published by:Arun
First published:

Tags: DMDK, M.K.Stalin, Vijayakanth

அடுத்த செய்தி