தேமுதிக - திமுக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு?

தேமுதிக - திமுக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு?

உதயநிதி திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு ஒவ்வொரு தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்தவகையில், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

  • Share this:
தேமுதிக திமுக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா எனும் கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து 60 இடங்களில் போட்டியிட்டது.
ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அங்கம் வகித்தாலும் அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் வாக்கு சதவீதம் அதிகம் பெறும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கூட அந்த தேர்தலில் தேமுதிக பெறமுடியவில்லை. இந்த நிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் கட்சியின் வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டும் என தேமுதிக முடிவு செய்துள்ளது. இருந்தாலும்கூட அது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை.

தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடர்ந்தாலும், அவ்வப்போது திமுகவுடன் நட்பு பாராட்டி வருவது, எதிர்காலத்தில் திமுக - தேமுதிக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக உதயநிதி திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு ஒவ்வொரு தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்தவகையில், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

Also read: ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்; சசிகலாவின் அதிரடி பிளான்!!

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரை தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது யாரும் எதிர்பாராத விதமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இன்று நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் திமுகவிற்கும் தேமுதிகவுக்குமான நட்பு என்பது வலுவடைந்துள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் உடைய நிர்வாகிகள் தொடர்ந்து தேமுதிகவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அப்படி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே சந்திரசேகர் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் தேமுதிகவில் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ளனர். எனவே தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை தேமுதிக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகிறது அல்லது இது வெறும் நட்போடு மட்டும் நின்று விடுமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Published by:Esakki Raja
First published: