கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து 60 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அங்கம் வகித்தாலும் அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
ஆனால் வாக்கு சதவீதம் அதிகம் பெறும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கூட அந்த தேர்தலில் தேமுதிக பெறமுடியவில்லை. இந்த நிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் கட்சியின் வளர்ச்சியை நோக்கி இருக்க வேண்டும் என தேமுதிக முடிவு செய்துள்ளது. இருந்தாலும்கூட அது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை.
Also read: திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை: அண்ணாமலை விமர்சனம்
தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடர்ந்தாலும், அவ்வப்போது திமுகவுடன் நட்பு பாராட்டி வருவது, எதிர்காலத்தில் திமுக - தேமுதிக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்தது.
குறிப்பாக உதயநிதி திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு ஒவ்வொரு தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்தவகையில், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சரை தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Also read: கோவில் திருவிழா நடத்த அனுமதி இல்லை... ஊரடங்கு தொடரும்: அரசு அறிவிப்பு
இந்த நிலையில் திமுகவிற்கும் தேமுதிகவுக்குமான நட்பு என்பது வலுவடைந்தது. ஏற்கனவே ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் உடைய நிர்வாகிகள் தொடர்ந்து தேமுதிகவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்படி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே சந்திரசேகர் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் தேமுதிகவில் இருந்து விலகி தற்போது திமுகவில் இணைந்துள்ளனர். தற்போதைய சூழலில் தனித்து போட்டியிட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிற நிலையே உள்ளது என்று தேமுதிக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அதனை உள்ளாட்சி தேர்தலில் சரிகட்டும் விதத்தில் தேமுதிகவின் செயல்பாடு இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.