விஜயகாந்த் விருத்தாச்சலம்... பிரேமலதா விருகம்பாக்கம்... தே.மு.தி.க சார்பில் போட்டியிட நிர்வாகிகள் தாக்கல் செய்த விருப்ப மனு

விஜயகாந்த் விருத்தாச்சலம்... பிரேமலதா விருகம்பாக்கம்... தே.மு.தி.க சார்பில் போட்டியிட நிர்வாகிகள் தாக்கல் செய்த விருப்ப மனு

தேமுதிக விருப்பமனு

விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியிலும், பிரமேலதா விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட தே.மு.தி.க கட்சி நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

  • Share this:
தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு  விருப்ப மனு வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனு வழங்கும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் விருப்பமனு பெற்று வரும் நிலையில், தே.மு.தி.க சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று விருப்பமனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் அந்த பணிகள் துவங்கியுள்ளது.

அதன்படி, தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிக்கு 10,000 ரூபாயும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கு 10,000 ரூபாயும் தனித்தொகுதிக்கு 5000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட வேண்டுமென தே.மு.தி.க நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியிலும்., விஜயபிரபாகரன் அம்பத்தூர் தொகுதியிலும், எல்.கே.சுதீஷ் ஆம்பூர் தொகுதியிலும் போட்டியிட நால்வரின் சார்பிலும் அவரது கட்சி  நிர்வாகிகள் விருப்பமனு பெற்றுள்ளனர்.

இது தவிர மற்ற சில தொகுதிகளிலும் போட்டியிட விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகியோருக்கு விருப்பமனு பெறப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: