உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி - தே.மு.தி.க அறிவிப்பு

விஜயகாந்த்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தே.மு.தி.க அறிவித்துள்ளது.

 • Share this:
  தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்களை 16, 17 இரண்டு நாட்கள் காலை 10 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவைப் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

  ஊரடக உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.கவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானர்வள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கட்டணத் தொகை

  மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் - 4,000 ரூபாய்
  ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - 2,000 ரூபாய்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: