அ.தி.மு.க, தே.மு.தி.க இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

விஜயகாந்த்

தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.கவும், தே.மு.தி.கவும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்ததிட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று கடந்த வாரம் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் தங்களது பேச்சுவார்தையை முடித்து அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் வழங்குவதற்கு ஒப்புக்கொண்டு இரு கட்சிகளும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனையடுத்து, அ.தி.மு.க, பா.ஜ.கவுடனும், தே.மு.தி.கவுடனும் பேச்சுவார்தையில் ஈடுபட்டுவருகின்றன.

  பா.ஜ.கவுடன் அ.தி.மு.க இரண்டு கட்டபேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இதற்கிடையில், பா.ம.கவுக்கு நிகரான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை அ.தி.மு.க 12 தொகுதிகளை வரை ஒதுக்கும் என கூறி வருவதால் தே.மு.தி.க, அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாகவே உள்ளது.

  இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேர்தல் பேச்சுவார்த்தை குழு இன்று தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 15 சட்டமன்றத் தொகுதிகளும் கூடுதலாக ஒரு ராஜ்ய சபா இடம் வேண்டும் என்பதில் தே.மு.தி.க உறுதியாக இருப்பது தெரிகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: