Home /News /tamil-nadu /

இந்து சமய அற நிலையத்துறையின் சிவராத்திரி விழாவுக்கு தி.க., வி.சி.க. எதிர்ப்பு... என்ன முடிவை எடுக்கப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?

இந்து சமய அற நிலையத்துறையின் சிவராத்திரி விழாவுக்கு தி.க., வி.சி.க. எதிர்ப்பு... என்ன முடிவை எடுக்கப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?

இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல. - தி.க.

இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல. - தி.க.

இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல. - தி.க.

    இந்து சமய அறநிலையத்துறை நடத்தவுள்ள சிவராத்திரி விழாவுக்கு திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாளை மறுநாளான மார்ச் 1-ம்தேதி இந்த விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளிப்பாரா அல்லது தடை விதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை கொண்டாடவுள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சரின் பணி பூஜை புனஷ்காரங்கள் செய்வதல்ல என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கூறியிருந்தார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பிரச்னையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் இதில் முரணாக ஈடுபடலாமா என்று பி.கே. சேகர்பாபுவுக்கு கேள்வி அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

    இதையும் படிங்க - சமூகநீதிப் பயணத்தில் தமிழகத்தைக் கடந்து இந்தியா முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

    ''இந்து அறநிலையத் துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கு மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்" என்று விரிவாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் விளக்கியிருக்கிறார்.

    இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி. இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல.

    இதையும் படிங்க - மார்ச் 3 அன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்... வானிலை மையம் எச்சரிக்கை

    கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான். நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறையும் அவர் பொறுப்பில் இருந்தது. சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு நாவலர் சென்ற போது, தீட்சதர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழியாக விலக்கிவிட்டார்.

    அப்பொழுது ஆன்மிகவாதிகள் பெரிய அளவில் பிரச்சினையாக்கியபொழுது, "இந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி என்பது - ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடுகிறார்களா என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவது இல்லை" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் - அமைச்சர் நாவலர்,

    தந்தை பெரியார் "பலே, பலே நெடுஞ்செழியன்" என்று பாராட்டி அறிக்கை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்துகிறோம். ('விடுதலை', 16,4,1967).

    இந்து அறநிலையத் துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள்! பார்ப்பனர்களைத் திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்ற வர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா?

    அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?. என்று தெரிவித்திருந்தார்.

    முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆன்மிக பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இச்செயலை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

    திராவிடர் கழகம், விசிகவைப் போன்று இன்னும் சில அமைப்புகள் அறநிலையத்துறையின் விழா குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தன. இதனால், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: K.Veeramani, MK Stalin

    அடுத்த செய்தி