தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு... சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்தது...!

பண்டிகை நெருங்கும்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட உள்ளதால் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அந்த ரயில்களில் பதிவு செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு... சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்தது...!
Representative Image
  • News18
  • Last Updated: June 27, 2019, 12:17 PM IST
  • Share this:
தீபாவளி பயணத்திற்கான ரயில் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அக்டோபர் 25-ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், தியாகராய நகர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஏராளமானோர் வீட்டில் இருந்தபடியே ஆன்லனையில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதனால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.


சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களான பாண்டியன் ரயிலில் காத்திருப்போர் பட்டியலில் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வைகை ரயிலில் 50-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். கோவை செல்லும் சேரன் விரைவு ரயிலில் 832 பேரும், நீலகிரி விரைவு ரயிலில் 300-க்கும் மேற்பட்டோரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

பகல் நேரத்தில் இயக்கப்படும் கோவை விரைவு ரயிலில் மட்டும் டிக்கெட் உள்ளது. பல ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட முன்பதிவு செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தீபாவளிக்கு முந்தைய தினத்திற்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது.

மேலும், பண்டிகை நெருங்கும்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட உள்ளதால் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அந்த ரயில்களில் பதிவு செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.Also see... கிரிக்கெட் மட்டையால் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading