ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

ரயில்

ரயில்

Diwali : தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துளளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.

  இந்நிலையில், ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதன்படி, தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்.

  தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21 ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக இருப்பார்கள். எனவே, அக்டோர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது

  அக்டோபர் 22ஆம் தேதி பயணம் செய்ய வரும் 24ஆம் தேதியும், அக்டோபர் 23ஆம் தேதி பயணம் செய்ய வரும் 25ஆம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுவது வழக்கம்.

  Must Read : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

  இதனால் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள், ரயில் கால அட்டவணையின்படி திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள பயணிகளை தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Deepavali, Diwali, Train ticket, Train Ticket Reservation