சென்னையிலிருந்து தீபாவளிக்காக 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக 27-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை 4 ஆயிரத்து 627 சிறப்புப் பேருந்துகள் உள்பட 13 ஆயிரத்து 527 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து தீபாவளிக்காக 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழக அரசு அறிவிப்பு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 21, 2019, 8:43 PM IST
  • Share this:
தீபாவளியையொட்டி, சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சென்னையிலிருந்து 4, 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல, மற்ற ஊர்களிலிருந்து 8 ஆயிரத்து 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளிப் பண்டிகை, வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, வரும் வியாழக்கிழமை முதல் 26-ம் தேதிவரை சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் கூடுதலாக 4, 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, மூன்று நாட்களும் சேர்த்து சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல, பிற ஊர்களிலிருந்து 8,310 பேருந்துகள் இயக்கப்படும்.


தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக 27-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை 4,627 சிறப்புப் பேருந்துகள் உள்பட 13,527 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மற்ற ஊர்களுக்கு 6,921 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள் உள்பட 30 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  இந்த முன்பதிவு மையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் வியாழக்கிழமை தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

Loading...

First published: October 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...