தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு எப்போது? அதிகாரிகள் தகவல்

தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு எப்போது? அதிகாரிகள் தகவல்
ரயில் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: October 15, 2019, 10:26 AM IST
  • Share this:
தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கம் முன்பதிவு குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் தங்கி படிப்பவர்கள் மற்றும் பணி புரிபவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். போக்குவரத்து கட்டணம், பாதுகாப்பு என்று பல அம்சங்களில் பேருந்துகளை விட ரயில் பயணம் சவுகரியமாக இருப்பதால், ரயில்களே பலரின் தேர்வாக இருக்கிறது.

பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும் நாளில் இருந்து 120 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியல் நீண்ட வண்ணம் உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் சிறப்பு ரயில் அறிவிக்கப்படுமா? என்னும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் இதுவரை சிறப்பு ரெயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிறப்பு ரெயில் குறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதிகபட்சமாக 5 முதல் 7 ரயில்கள் இயக்க தற்போது தெற்கு ரயில்வேயிடம் பெட்டிகள் உள்ளது. எனவே நெல்லை, கோவை, எர்ணாகுளம் மார்க்கமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் பெரும்பாலான சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு ரயில்களுக்கான நேர ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறப்பு ரெயில் தொடர்பான விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading