Home /News /tamil-nadu /

சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதற்கு இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்

சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதற்கு இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்

அரசுப் பேருந்து

அரசுப் பேருந்து

இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 643 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு 730 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி முடிந்ததை அடுத்து சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்பட்ட 16 ஆயிரத்து 540 பேருந்துகளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

    பண்டிகை முடிந்ததை அடுத்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் மக்களுக்காக, தினசரி இயக்கப்படும் இரண்டாயிரத்து 100 பேருந்துகளுடன், அடுத்த நான்கு நாட்களுக்கு ஒன்பதாயிரத்து 319 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    அதன்படி, இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 643 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு 730 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமையன்று சென்னைக்கு 913 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு 900 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

    Must Read : தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

    அதேபோல் ஞாயிறன்று சென்னைக்கு ஆயிரத்து 729 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இரண்டாயிரத்து 180 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இறுதியாக வரும் 8ஆம் தேதி (திங்கட்கிழமை) சென்னைக்கு ஆயிரத்து 34 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளுக்கு ஆயிரத்து 190 பேருந்துகளையும் இயக்க, போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Diwali, Special buses

    அடுத்த செய்தி