முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ் புறப்படும் இடங்கள் எவை? -

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ் புறப்படும் இடங்கள் எவை? -

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள்

Diwali Special Buses | தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்களை சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்களை சென்னை போக்குவரத்து காவல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : நடத்தையில் சந்தேகம்... மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவன்... குரோம்பேட்டை அருகே பரபரப்பு

இந்நிலையில், தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக வரும் 21.10.2022 முதல் 23.10.2022 வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

சென்னையில் இருந்து வெளியூருக்கு தாம்பரம், தாம்பரம் சானிடோரியம், கே.கே.நகர், மாதவரம், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

வெளியூர் செல்லும் பேருந்துகளின்  விவரம் :

 1.  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் - (திண்டிவனம் மார்க்கமாக) திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோயில்.

2.  தாம்பரம் சானிடேரியம் - கும்பகோணம், தஞ்சாவூர்.

3. கே.கே.நகர் பேருந்து நிலையம் -  (ECR மார்க்கமாக) புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.

4. மாதவரம் பேருந்து நிலையம் -  (செங்குன்றம் மார்க்கமாக) காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி,

ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி.

5.  பூந்தமல்லி பணிமனை - காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி.

6. கோயம்பேடு பேருந்து நிலையம் - திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறை.

எனவே, வெளியூர் செல்லும் பயணிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Deepavali, Diwali, Special buses