ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளிக்கு ஊருக்கு பஸ்ல போறீங்களா..? கோயம்பேடு போகும் முன் இதை படிங்க

தீபாவளிக்கு ஊருக்கு பஸ்ல போறீங்களா..? கோயம்பேடு போகும் முன் இதை படிங்க

தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு பக்கம் புகார்கள் குவிந்துள்ளன. இந்த சூழலில் மக்கள், அரசு பேருந்தை அதிகம் நாட தொடங்கியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை பேருந்து நிலையங்களில் இருந்து, தீபாவளியையொட்டி மற்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  தீபாவளி பண்டிகை மற்றும் அதனையொட்டி வரும் விடுமுறை நாட்களை கொண்டாட, சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். ரயில் டிக்கெட்டுகள் முழுவதும் ஃபுல்லாகியுள்ள நிலையில், பேருந்துகள் மூலமாக பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

  தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு பக்கம் புகார்கள் குவிந்துள்ளன. இந்த சூழலில் அந்த வகையில் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது –

  தீபாவளியையொட்டி சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து 21-10-2022 முதல் 23-10-2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு 19ஆம் தேதி தொடக்கம் : மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

  பின்வரும் பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களின் விபரம் –

  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் :

  திருவண்ணாமலை, செஞ்சி, (வழி : திண்டிவனம் மார்க்கம்)

  வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் (வழி : மதுராந்தகம் திண்டிவனம் மார்க்கம்)

  நெய்வேலி டி.எஸ்., சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோயில் (வழி : விக்கிரவாண்டி பண்ருட்டி மார்க்கம்)

  தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் - 

  கும்பகோணம். தஞ்சாவூர்  (வழி : விக்கிரவாண்டி பண்ருட்டி மார்க்கம்)

  கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம் - 

  புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் (வழி : ஈ.சி.ஆர். மார்க்கம்)

  தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... 5 நாட்கள் தொடரும் - வானிலை மையம்

  மாதவரம் பேருந்து நிலையம் - 

  காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, (வழி : செங்குன்றம் மார்க்கம்)

  பூந்தமல்லி பைபாஸ் மாநகர போக்குவரத்து கழகம் பூந்தமல்லி பணிமனை அருகில் - 

  காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி

   கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் –

  திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறை.

  Published by:Musthak
  First published: