தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கொட்டும் மழையிலும் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி வருகின்ற நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கவும் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கவும் ஆர்வம்காட்டி வரும் வேளையில், இன்னும் தீபாவளிக்கு 6 நாட்களே உள்ளதாலும், தீபாவளிக்கு முந்தைய வார இறுதிநாள் என்பதாலும் பெருமளவில் மக்கள் சென்னை தியாகராய நகர் பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கொட்டும் மழையிலும் கையில் குடையுடன் பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வமுடன் ரங்கநாதன் தெருவுக்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கும் வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா காரணமாக புத்தாடை வாங்க வரும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் முகக்கவசங்கள் அணியவும் தொடர்ச்சியாக ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தி வருகின்றனர்.
Also read: காற்றின் திசைவேக மாறுபாடு... தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வந்தாலும்கூட மழை காரணமாக சாலையோர வியாபாரிகளும் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.