தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையாக ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தோலோ, வெடித்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படாத போதிலும், காளி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், கர்நாடகாவில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கூறினார்.
அதாவது, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.