ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு வரை - இன்றைய தலைப்புச் செய்திகள் (ஜூன் 23, 2022)

Headlines Today : அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு வரை - இன்றைய தலைப்புச் செய்திகள் (ஜூன் 23, 2022)

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

Headlines Today தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 21-ந்தேதி ரயிலில் பயணிக்க விரும்புவோர் இன்று முன்பதிவு செய்யலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வானகரத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிப்பு.

  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,

  வல்லுநர் குழுவுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

  பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 26-ம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில், மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி காவிரியில் கர்நாடகா எந்த அணையையும் கட்ட முடியாது என அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஜல்சக்தி அமைச்சரை சந்தித்தபின் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தொண்டைமான் ஆட்சிக்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மன் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்

  மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நீடிப்பார் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

  முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை உத்தவ் தாக்கரே நேற்றிரவு காலி செய்தார்.

  கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர், ஐ.டி.ஐ முதல்வரை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  காஷ்மீர் மாநிலம் பகர்வால்ஸ் பகுதியில் பனி புயலில் சிக்கித் தவித்த 7 பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

  மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு ஜூலை 15-ல் தொடங்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

  நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  இந்தியாவின் பொருளாதாரம், இந்த ஆண்டு 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் முதல் பாடலுக்கு தாய்க்கெலவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அமெரிக்காவின் மயாமி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன.

  கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினர் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தியதை உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

  Must Read : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், மத்திய பிரதேச அணிக்கு எதிராக, மும்பை அணி முதல் நாள் ஆட்டத்தில் 248 ரன்கள் சேர்த்தது.

  டி.என்.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

  தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பாக ஊர் செல்ல பதிவு செய்யலாம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: ADMK, Headlines, Today news, Top News