தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள்; கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம்

கோயம்பேட்டில் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக அனைத்து நடைமேடைகளிலும் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள்; கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: November 3, 2018, 9:48 AM IST
  • Share this:
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏராளமானோர் திரண்டதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது.

தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து புறப்படும் பேருந்துகளில் நேற்றிரவு கூட்டம் அலைமோதியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவிலும் மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். எந்த பேருந்து எந்த நடைமேடையில் உள்ளது என தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக அனைத்து நடைமேடைகளிலும் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும் முன்பதிவு செய்த பேருந்துகள் தாமதமாக வந்ததாக பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டுவதற்காக ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்தஊர் செல்கின்றனர்.


BUSES, ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
கோயம்பேட்டில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்


சனி, ஞாயிறு , திங்கள், செவ்வாய் என தொடர் விடுமுறை என்பதால் இன்று முதலே பலர் சொந்த ஊர் செல்கின்றனர். இதனால் நள்ளிரவிலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

தென்மாவட்டங்களுக்கு அதிகஅளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் ஊரப்பாக்கம் வழியாக இயக்கப்பட்டதால், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாகக் காணப்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் பெருங்களத்தூர் பகுதியில் சுமார் 125 காவலர்கள் ஈடுபட்டனர்.இதேபோல கோயம்பத்தூரிலும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் வெளியூர் செல்லும் பயணிகள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Also see...

First published: November 3, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading