தீபாவளி பரிசு பொருட்களை உரிய ஆவணங்களுடன் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ

தீபாவளி பரிசுப் பொருட்களை உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லலாம் என்றும், ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

தீபாவளி பரிசு பொருட்களை உரிய ஆவணங்களுடன் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ
சத்ய பிரதா சாஹு (கோப்பு படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2019, 9:18 AM IST
  • Share this:
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்களை உரிய ஆவணங்களுடன் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையில் சத்யபிரதா சாஹூ எடுத்துரைத்தார். அப்போது அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாவும் அவர் கூறினார். தீபாவளிப் பண்டிகை, அக்டோபர் 27 ம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பரிசு பொருட்கள் கொண்டு செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லலாம் என்றும், ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.


செலவின பார்வையாளர்கள், துணை ராணுவப் படையினர் தொகுதிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினரும், 3 நிலை கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் அவர் கூறினார்.

விக்கிரவாண்டியில் 139 இடங்களில் 275 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 170 இடங்களில் 299 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட இருப்பதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Also Watch
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading