ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளி விடுமுறை: 2வது நாளாக ஸ்தம்பித்த சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

தீபாவளி விடுமுறை: 2வது நாளாக ஸ்தம்பித்த சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து

சென்னையில் இருந்து சோந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  தீபாவளி பண்டிகை  அக்டோபர் 24ம் தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது.  இதையெட்டி சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் நேற்று முதல் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால், நேற்று இரவில் தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பரனூர் டோல்கேட் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  2வது நாளான இன்றும் ஏராளமானோர் தங்களின் ஊர்களுக்கு பயணிப்பதால் செங்கல்பட்டு மாவட்டம்  மறைமலை நகர் முதல் கூடுவாஞ்சேரி வரை  5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை - திருச்சி  மார்க்கம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல் சிக்கியுள்ளன.

  இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவி விற்பனையா? பன்வாரிலால் புரோகித் பேச்சுக்கு கே.பி.அன்பழகன் மறுப்பு

  தொடர்ந்து போக்குவரத்து நெரிசலால் பயணிகள் வாகன ஓட்டிகள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்த்து கடந்து செல்ல இருசக்கர வாகனங்கள்,கார்கள் அணுகு சாலையை பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

  இதனால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ராபர்ட் எபினேசர்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai, Traffic