ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்ச்..இன்சாக நகரும் மக்கள்! தீபாவளி ஷாப்பிங்குக்காக குவிந்த கூட்டம்! ஸ்தம்பித்த தி நகர்!

இன்ச்..இன்சாக நகரும் மக்கள்! தீபாவளி ஷாப்பிங்குக்காக குவிந்த கூட்டம்! ஸ்தம்பித்த தி நகர்!

சென்னை தி.நகரில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

சென்னை தி.நகரில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

300 கேமராக்கள் மூலம் தியாகராய நகர்,பாண்டி பஜார் ரங்கநாதன் தெரு கண்காணிக்கப்பட்டு வருகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாடுவதற்காக துணிகள் பட்டாசு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தியாகராய நகர் பகுதியில் குவிந்துள்ளனர்.

  இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதுகாப்புகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து நடந்து சென்று பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரியிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டறிந்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பாண்டி பஜார் தி நகர், மாம்பலம் காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் MAY I HELP YOU DESK போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ மற்றும் கார்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

  இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை... இதுதான் காரணமா?

  முதல்முறையாக தியாகராய நகரில் ஆறு FRC கேமரா பொருத்தப்பட்டுள்ளது.கூட்டத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காகக் குற்றப்பிரிவு போலீசார் மப்டியில் உள்ளதாகவும் இந்த கேமராக்கள் மூலம் பில்டர் செய்து ஏற்கனவே குற்றங்கள் அவர்கள்மீது உள்ளதா என்பது குறித்துக் கண்டறியவும் உதவியாக இருக்கும் என்றார்.

  மேலும், அதற்கான முழு முயற்சியிலும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். வழக்கத்திற்கு மாறாக 50 கேமராக்கள் கூடுதலாக போடப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே உள்ள 250 சேர்த்து மொத்தம் 300 கேமராக்கள் மூலம் தியாகராய நகர்,பாண்டி பஜார் ரங்கநாதன் தெரு கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai, Diwali festival