ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளி விடுமுறை... சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் 1,10,000 பேர் முன்பதிவு

தீபாவளி விடுமுறை... சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் 1,10,000 பேர் முன்பதிவு

மாதிரி படம்

மாதிரி படம்

வரும் 24-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், 21, 22, 23ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை ஒரு லட்சத்துக்கு 10 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

  தமிழகத்தில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வார்கள். வெளியூர் பயணங்களுக்கு பயணிகளின் முதல் தேர்வாக ரயில் பயணம் உள்ளது. எனினும், தீபாவளி விடுமுறை நாட்களுக்கான ரயில் பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

  இதனால், பேருந்துகளில் செல்வதற்காக பலரும் முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊருக்கு செல்ல அரசுப் பேருந்துகளில் இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், 21, 22, 23ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள ஆயிரம் பேருந்துகளில் 670 பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சில பகல் நேர பேருந்துகளில் மட்டுமே இருக்கைகள் காலியாக உள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

  பிற போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் 20ம் தேதி பேருந்து நிலையங்களில் தொடங்குகிறது.

  Read More: அடுத்த 3 மணி நேரத்திற்குள் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

  சென்னையில் கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் சிறப்பு முன்பதிவு டிக்கெட் கவுன்டர் திறக்கப்படும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bus, Deepavali, Koyambedu