அடுத்த 3 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? : வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

மழை

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் விடுத்துள்ள அறிவிப்பில், “தென் கேரளம் முதல் தெற்கு கொங்கன் வரை (0.9 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஏப்ரல் 13 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

  தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  ஏப்ரல் 14-ல், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  ஏப்ரல் 15 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

  ஏப்ரல் 16 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  ஏப்ரல் 17 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையானது விருதுநகர் 6 சென்டிமீட்டர், வேடசந்தூர் - 5 சென்டிமீட்டர் ; குன்னூர், குடவாசல், கயத்தாறு தலா 4 சென்டிமீட்டர், பாடாலூர், கோவிலான்குளம், நாகப்பட்டினம் மணல்மேடு, கடலூர் ஸ்ரீமுஷ்ணம், கிருஷ்ணகிரி பரூர், புதுக்கோட்டை மீமிசல், அரவக்குறிச்சி தலா 3 சென்டிமீட்டர், கன்னியாகுமரி சூரழகோடு, பரமக்குடி, திருப்பத்தூர் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

  Must Read : கொரோனா 2ஆவது அலை : ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

   

  இந்நிலையில், மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: