ஆபத்தில் சென்னையும், திருவள்ளூரும் - கொரோனா பரிசோதனைகளின் போதாமையை காட்டும் புள்ளி விபரங்கள்

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பரிசோதனைகள் விவரங்களை முதல் முறையாக அரசு வெளியிட்டுள்ளது. 

ஆபத்தில் சென்னையும், திருவள்ளூரும் - கொரோனா பரிசோதனைகளின் போதாமையை காட்டும் புள்ளி விபரங்கள்
கோப்புப் படம்
  • Share this:
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் ஏழு பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. அதாவது 100-ல் 14 பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. மாநிலத்திலேயே இது தான் அதிகமானதாகும்.

தொற்று பரவலின் அளவை பொருத்து பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் அதிக தொற்று அறிதல் சதவீதம் இருப்பது போதுமான பரிசோதனைகள் செய்யாததையே காட்டுகின்றன.

வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் விமானம், ரயில் கப்பல் மூலமாக வந்தவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்திலிருந்து இதுவரை 15833 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையும் சென்னையின் பரிசோதனைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை தவிர்த்து பார்த்தால் தொற்று அறிதல் சதவீதம் மேலும் அதிகமாகும்.


சென்னைக்கு அடுத்தபடியாக, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று சதவீதம் 9.8% ஆக உள்ளது. காஞ்சிபுரத்தில் 4.58% ஆக இது உள்ளது.

அரசு வெளியிட்டுள்ள தகவல்கள்படி  சென்னையில் 121950, சேலம் 22751, கோவை 22872,  திருவண்ணாமலை 21996,  கன்னியாகுமரி 18366 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

எண்ணிக்கை அடிப்படையில் இவை அதிகமாக இருந்தாலும் அந்தந்த மாவட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட பரிசோதனைகள் பட்டியல் வேறு மாதிரி உள்ளது.தலா பத்து லட்சம் மக்களுக்கு  சென்னையில் 16903, தேனியில் 12060, திருநெல்வேலி 9386, வேலூர் 8996, கன்னியாகுமரி 8893, திருவண்ணாமலை 7962 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சராசரியாக பத்து லட்சம் பேரில் 6420 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மட்டுமே இதை விட அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய சராசரியான 3278 விட திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் குறைவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவள்ளூரின் தொற்று சதவீதம் மிக அதிகம் என்பது குறிப்பிட்டு கவனிக்க வேண்டியதாகும்.

அங்கே பத்து லட்சம் பேருக்கு கணக்கிட்டால் 3124 பரிசோதனைகள் மட்டுமே நடந்துள்ளன, கர்நாடக எல்லையில் அமைந்த மாவட்டமான கிருஷ்ணகிரியில் 2922, மற்றும் மாநிலத்திலேயே மிகக் குறைவாக திருப்பூர் 2594 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட அளவில் தொற்று அறிதல் சதவீதங்கள்:

அரியலூர் - 9.3%

செங்கல்பட்டு - 9.8%

சென்னை- 14.43%

கோவை-0.7%

கடலூர்- 3.9%

தருமபுரி- 0.09%

திண்டுக்கல்-1.93%

ஈரோடு-0.53%

கள்ளக்குறிச்சி-2.93%

காஞ்சிபுரம்- 4.58%

கன்னியாகுமரி-0.41%

கரூர்-0.99%

கிருஷ்ணகிரி-0.42%

மதுரை-1.95%

நாகப்பட்டினம்-0.80%

நாமக்கல்-1.07%

பெரம்பலூர்-3.55%

புதுக்கோட்டை-0.42%

ராமநாதபுரம்-1.2%

ராணிப்பேட்டை-1.91%

சேலம்- 0.90%

சிவகங்கை-0.61

தேனி-1.3%

தஞ்சாவூர்- 0.57%

தேனி-0.68%

நீலகிரி-0.24%

திருவள்ளூர்-9.8%

திருவாரூர்- 0.6%

திருச்சி-0.64%

திருநெல்வேலி-2.14%

திருப்பத்தூர்-0.40%

திருவண்ணாமலை-2.11%

தூத்துக்குடி-2.22%

வேலூர்-0.31%

விழுப்புரம்-3.56%

விருதுநகர்- 1.18%

Also read... ரயிலில் உறங்கியதால் கேரளா சென்ற மதுரை மூதாட்டி - மொழி பிரச்னையில் மனநல காப்பகத்தில் அனுமதி; போராட்டி மீட்ட மகள்Also see...
First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading