டெங்குவைக் கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு உத்தரவு

டெங்குவைக் கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு உத்தரவு
மாதிரிப்படம்
  • Share this:
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து, இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது டெங்குவை கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய அளவில் குழு அமைத்து மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஸ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 3 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறினார். இந்த ஆண்டில் 3,400 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான் என்றும் அவர் கூறினார்.


First published: October 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...