முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சிறப்பான நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிப்பது, மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை, ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 • Last Updated :

  சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்வரும் நகர்ப்புற தேர்தல் தொடர்பாக நேற்று மாலை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா மற்றும் ஒருங்கிணைந்த 77 மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

  கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1989-ம் ஆண்டு, சட்டப் பேரவையில் முதல்முறையாக உரையாற்றிய தொகுப்பு, "தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்" எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. பின்னர், எதிர்வரும் நகர்ப்புற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, திமுக வேட்பாளர்களை அடையாளம் காணுவது, கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

  ALSO READ |  தமிழ்நாடு முழுவதும் அதிரடி... ஆபத்தான பள்ளி கட்டடங்களை கண்டறியும் பணி தொடக்கம்

  மேலும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சிறப்பான நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிப்பது, மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை, ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  top videos
   First published: