'குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்' - மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை
'குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்' - மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை
மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி
Sivaganga District | சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவியர்களுக்கு TAB-ஐ (சிறிய மடிக்கணினி) ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
குடும்பச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, மருத்துவப் படிப்பிற்கான அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவியர்களுக்கு TAB-ஐ (சிறிய மடிக்கணினி) ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், தமிழக அரசின் சிறப்பு வாய்ந்த சட்டமான மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டினை பெற்ற சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் எஸ்.காஞ்சனா(திருப்பூர் மாவட்டம்) ஆர்.சுவீதா (விழுப்புரம் மாவட்டம்) டி.மாதீஸ்வரி (பார்த்திபனூர், சிவகங்கை மாவட்டம்), எஸ்.முனிரெத்தினம் (தர்மபுரி மாவட்டம்) ஜெ.சுவாதி (புதுக்கோட்டை மாவட்டம்) எஸ்.பிரியா (சேலம் மாவட்டம்) ஆகிய 6 மாணவியர்களுக்கு, தமிழக அரசின் உத்தரவின்படி, TAB வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் சிறப்பாக பயின்று, மருத்துவப் படிப்பிற்கென அரசால் ஒதுக்கப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டினை பெற்று, தற்சமயம் மருத்துவக் கல்லூரியில் பயிலுவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளீர்கள். தங்களது குடும்பச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தங்களது படிப்பில் முழுக்கவனம் செலுத்தி, உயிர் காக்கும் சேவையான மருத்துவச் சேவையை திறம்பட செய்வதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
செய்தியாளர் : சிதம்பரநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.