உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தண்ணீர் தினம்
Thiruvarur District : மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூரில் விடுதி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி மையம் இணைந்து நடத்திய விடுதி மாணவ,மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்,இந்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் மாணவ மாணவர்கள் தங்கள் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும்,மாணவர்களாகிய நீங்கள் நூலகங்களுக்கு செல்வதையும் தினசரி நாளிதழ்கள் வாசிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.இந்த நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன்,முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குடிநீர் தர பரிசோதனை தொடர்பான செயல் முறை விளக்கம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை காயத்ரி கிருஷ்ணன் நட்டு வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உதவி இயக்குனர் பழனிச்சாமி,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: செந்தில்குமரன், திருவாரூர்
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.