தங்க இடமும் பணமுமின்றி தவித்த கேரள செண்ட மேளக்குழு... உதவிய ஆட்சியர்!

தங்க இடமும் பணமுமின்றி தவித்த கேரள செண்ட மேளக்குழு... உதவிய ஆட்சியர்!
கேரள செண்ட மேளக்குழு
  • Share this:
திருச்சியில் தங்க இடமும் பணமுமின்றி தவித்த கேரள செண்ட மேளக்குழு 2 பெண்கள் உள்ளிட்ட  5 பேருக்கு உணவு, தங்குமிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் உதவியுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர், கோட்டயம் பகுதிகளை சேர்ந்த 5 பேர்  கடந்த 6 மாதத்திற்கு முன்பு செண்ட மேளம் வாசிக்க திருச்சிக்கு வந்தனர். திருச்சியிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் செண்ட மேளம் வாசித்து வந்தனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட போது அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் இருந்துள்ளனர். இதனால் உடன் கேரளாவிற்கு திரும்ப முடியாமல், திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.


ஊரடங்கு 13-வது நாளாக தொடரும் நிலையில், அவர்கள் கைவசம் வைத்திருந்த பணம் முழுவதும் செலவான நிலையில், தாங்கள் குடியிருந்த அறையையும் காலி செய்ய வீட்டு உரிமையாளர் கேட்டு கொண்டதால்,  பாலக்கரை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து  தங்களுக்கு உதவ வேண்டும் அல்லது கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கோரிக்கை வைத்தனர். அவர்களின் நிலையை விசாரித்து அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,
தற்போது கேரளாவிற்கு அனுப்ப இயலாத நிலை உள்ளது என்றும், அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் தங்கும் இடம் ஆகியவற்றை உடனடியாக ஏற்படுத்தித்தர உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே தங்கி இருந்த வீட்டிலையே அவர்கள் தொடர்ந்து  தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading