Ration Shop | இரண்டாம் தவணை ரூ.2000, 14 மளிகை பொருட்கள் தொகுப்பு: இன்று முதல் விநியோகம்

ரேஷன் கடை

நியாய விலைக் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை 2-ம் தவணையாக இரண்டாயிரம் ரூபாயும், 14 வகை மளிகைப் பொருட்களும் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன. இம்மாத இறுதி வரை மளிகைப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ் நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் தொகுப்பும், இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும் ஜூன் 15ம் தேதியான இன்று முதல் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை இம்மாத இறுதி வரை அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    இரண்டாம் கட்டமாக 2000 ரூபாய் நிதியுதவிக்கான டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியில் அரிசி அட்டைதாரர்கள், சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும், அப்போது கட்டாயம் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். 14 வகை மளிகைப் பொருட்கள் விநியோகத்தில் நியாய விலைக்கடை ஊழியர்கள் யாராவது தவறு செய்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அப்போது குறிப்பிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... தமிழகத்தில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை..இன்றைய விலை என்ன தெரியுமா?

    ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் தொகுப்பு இன்று முதல் அளிக்கப்பட உள்ள நிலையில் , கோவையில் மளிகைப்பொருட்களை packing செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. ஒருநாளைக்கு 200 பேர் மட்டும் ரேஷன் கடைகளுக்கு வந்து 2000ரூபாய் பணம் மற்றும் மளிகை தொகுப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டத்தில் மட்டும்1400 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையும், மளிகை தொகுப்பும் அளிக்கப்பட உள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published: