• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 2,500 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியது

2,500 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியது

வரிசையில் நிற்கும் மக்கள்

வரிசையில் நிற்கும் மக்கள்

ரேஷன் கடைகளில் நாள் ஒன்றிற்கு தலா 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்று முதல் 2,500 ரூபாயுடன் கூடிய, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா இரண்டாயிரத்து 500 ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, கடந்த 20-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

    இதற்காக 5 ஆயிரத்து 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், இரண்டு கோடியே 10 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில், வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, இன்றுமுதல் ரேஷன் கடைகளில் நாள் ஒன்றிற்கு தலா 200 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

    டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில், ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுகளை வாங்கிக் கொள்ளலாம். ஒருவேளை குறிப்பிட்ட நாளன்று செல்ல முடியவில்லையெனில், கடைசி நாளான 13ம் தேதி சென்று பயனாளர்களை பொங்கள் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: