ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மது போதையில் தகராறு.. எஸ்.ஐ. மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது..

மது போதையில் தகராறு.. எஸ்.ஐ. மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது..

மது போதையில் தகராறு.. எஸ்.ஐ. மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது..

மது போதையில் தகராறு.. எஸ்.ஐ. மண்டையை உடைத்த போலீஸ்காரர் கைது..

எஸ்.ஐ-யை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. மீண்டும் ஒரு வழக்கில் போலீஸ்காரர் சிக்க காரணம் என்ன?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மது போதையில் தகராறு செய்த போலீஸ்காரரை கண்டித்ததால், எஸ்.ஐ.யின் தலையை கல்லால் தாக்கி உடைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி என்ன?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் 53 வயதான பரமசிவம். இவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். பரமசிவம் கடந்த செவ்வாய் கிழமை இரவு பூவந்தி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார்.

அப்போது சோதனைச் சாவடி அருகே சலூன் கடை வைத்திருக்கும் பாஸ்கரன் என்பவர் ஓடி வந்து, தனது கடையில் முத்துப்பாண்டி என்ற போலீஸ்காரர் தகராறு செய்வதாக புகார் கூறியுள்ளார்.

பரமசிவம், காவலர் ஒருவருடன் கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட முத்துப்பாண்டியை வீட்டிற்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், புதன் கிழமை காலை சோதனைச்சாவடிக்கு வந்த முத்துப்பாண்டி, பரமசிவத்திடம் தகராறு செய்து, ‘நானே ஒரு போலீஸ்காரன், என்னையே கண்டிக்கிறாயா’ என பரமசிவத்தின் தலையில் கல்லால் தாக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாக்குதலில் பரமசிவத்தின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த பரமசிவம் மதுரை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பூவந்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள முத்துப்பாண்டி இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.

அடிக்கடி மது அருந்தியதால் அவர்மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பணிக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், தான் எஸ்.ஐ யை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

First published:

Tags: Sivagangai, Sub inspector