• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீன் குழம்பால் வந்த தகராறு.. தூக்கில் தொங்கிய கணவர் - குடும்பத்தினர் அதிர்ச்சி

மீன் குழம்பால் வந்த தகராறு.. தூக்கில் தொங்கிய கணவர் - குடும்பத்தினர் அதிர்ச்சி

சென்னை பெயிண்டர்

சென்னை பெயிண்டர்

தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததையும், தனது தாய் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததையும் பார்த்து குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர்.

  • Share this:
    ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த ஆத்திரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய பெயிண்டர், மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொரட்டூர் அக்ரகாரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் குமார். இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி துர்கா வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மோகன் மற்றும் ஜீவா என்ற மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குமார் தனது வேலையை முடித்துக்கொண்டு நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குமாருக்கு மனைவி துர்கா மீன் குழம்புடன் சாதம் பரிமாறியுள்ளார்.

    Also Read:  அரிவாளுடன் ஆட்டம்போட்ட இளைஞர்.. வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய வீடியோ

    மனைவியிடம் இன்று ஆடி கிருத்திகை நாளாக இருந்தும் ஏன் மீன் குழம்பு வைத்தாய் என்றுகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து மகன்கள் இருவரும் அருகில் உள்ள துர்காவின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் இரவு 10 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது தனது தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததையும், தனது தாய் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன்கள் கூச்சலிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக தொங்கி கொண்டிருந்த குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயத்துடன் கிடந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    Also Read:  ஈஸ்ட் இந்தியா போல நார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல் விமர்சனம்

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை, இறந்துவிட்டதாக நினைத்து பயந்து போன குமார், தனது வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     செய்தியாளர் : கன்னியப்பன் 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: