ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் தகராறு... மதுபோதையில் கடை ஊழியரை தாக்கிய இளைஞர்கள்

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் தகராறு... மதுபோதையில் கடை ஊழியரை தாக்கிய இளைஞர்கள்

செல்போன் கடையில் தகராறு

செல்போன் கடையில் தகராறு

Tanjore News : தஞ்சாவூரில் செல்போன் கடைக்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thanjavur, India

  செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் மற்றும் போதையில் வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே அம்மன் செல்போன் சர்வீஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் தங்களது மொபைல் டிஸ்ப்ளே உடைந்து விட்டதாகவும், அதனை மாற்றி தருமாறு கூறியுள்ளனர்.

  அப்போது கடையில் இருந்த சர்வீஸ் பொறியாளர் ஹரி ராஜாளி என்பவர் டிஸ்ப்ளே மாற்ற 1800 ரூபாய் ஆகும் என கூறியுள்ளனர். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தை கூறிக்கொண்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : திமுக - பாஜகவினர் இடையே வெடித்த மோதல் : நகர்மன்ற உறுப்பினர் உள்பட 7 பேருக்கு காயம்!

  ஒரு கட்டத்தில் வாய் தகராறு, கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  மேலும் இதுகுறித்து கடை ஊழியர் ஹரி ராஜாளி தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர் : குருநாதன் - தஞ்சாவூர்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Tanjore