• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

கோப்புப் படம்.

கோப்புப் படம்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • Share this:
    தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சிலம்பரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மதுபான கடைகள் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகளவில் நடப்பதாகவும், அவற்றின் அருகில் விபத்துக்களும் நடைபெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    மதுபான கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும் படிக்க...தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

    மதுக்கடை பார்களை மூட வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக, உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களை மூடக் கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: