Home /News /tamil-nadu /

டாஸ்மாக் மதுப்பான பார் டெண்டர் எதிர்ப்பு வழக்குகள் தள்ளுபடி - உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் மதுப்பான பார் டெண்டர் எதிர்ப்பு வழக்குகள் தள்ளுபடி - உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் மதுப்பான பார் டெண்டர் எதிர்ப்பு வழக்குகள் தள்ளுபடி

டாஸ்மாக் மதுப்பான பார் டெண்டர் எதிர்ப்பு வழக்குகள் தள்ளுபடி

டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது.  கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள் நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, டெண்டர் படிவங்கள் பெறுவதற்கு யாரையும்  தடுக்கவில்லை என்றும், விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார். இதுவரை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டதாகவும் தெரிவித்தார்.

    மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ்,  கொரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், கட்டிட உரிமையாளர்களின் ஆட்சேபனையில்லா சான்று தேவையில்லை என கூறிவிட்டு, தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

    Also Read : காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.25 லட்சம் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

    குறிப்பாக டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்ட 8 மாவட்டங்களை பொறுத்தவரை புதிய டெண்டர் கோரக்கூடாது என உத்தரவிடவும், ஒரு அதிகாரியை நியமித்து டெண்டர்களை திறக்க வேண்டும் எனவும், அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சரவணன், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Madras High court, Tasmac

    அடுத்த செய்தி