பட்ஜெட் மீதான விவாதம்: தொடங்கியது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்

பிப்ரவரி 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

பட்ஜெட் மீதான விவாதம்: தொடங்கியது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
தமிழக சட்டசபை
  • News18
  • Last Updated: February 11, 2019, 11:16 AM IST
  • Share this:
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகியது.

தமிழகத்துக்கான 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த 8-ம் தேதி சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடியுள்ளது. இதையடுத்து இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது.

பிப்ரவரி 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தியப் போராட்டம், கஜா புயல் சீரமைப்புப் பணிகள், விவசாயத் துறையில் உள்ள பிரச்னைகள் ஆகியவைக் குறித்து விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பட்ஜெட் தொடரில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, தற்போது தொடங்கி உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் நிறைவடைந்த உடன் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான வேலைகள் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: வராத தண்ணீருக்கு வரியா?
First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்