• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜூன் 12க்கு முன்பே மேட்டூர் அணை திறப்பா? - முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

ஜூன் 12க்கு முன்பே மேட்டூர் அணை திறப்பா? - முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த சில மாதங்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணை நிரம்பியது.

  • Share this:
    காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசானை நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற வகையில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஒரு சில ஆண்டுகளில் பருவமழை தாமதம் மற்றும் வறட்சி காரணமாக மேட்டூர் அணை திறக்கப்படுவது தாமதமாகும்.

    கடந்த சில மாதங்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னரே திறப்பது குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: