ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெருங்கும் தீபாவளி பண்டிகை - என்னென்ன பட்டாசு வெடிக்கலாம்? 28-ம் தேதி ஆலோசனை..!

நெருங்கும் தீபாவளி பண்டிகை - என்னென்ன பட்டாசு வெடிக்கலாம்? 28-ம் தேதி ஆலோசனை..!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பட்டாசுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வரும் 28ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

  அடுத்த மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

  ஆலோசனைக்கு பிறகே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்படும்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Deepavali, Diwali, Fire crackers, New Secretariat