• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசு கேட்டதும்... மத்திய அரசு கொடுத்ததும்...

தமிழக அரசு கேட்டதும்... மத்திய அரசு கொடுத்ததும்...

கோப்புப்படம்

கோப்புப்படம்

Cyclone Gaja | கஜா புயல் நிவாரண நிதியாக 15,000 கோடி ரூபாய் கேட்டுள்ள தமிழக அரசின் கோரிக்கையை இம்முறையாவது மத்திய அரசு முழுமையாக நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை பெருவெள்ளம், வர்தா புயல் ஆகியவற்றுக்கு தமிழக அரசு கோரிய நிவாரண நிதி இன்னும் முழுமையாக கிடைக்காத நிலையில், கஜா புயலுக்காக ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தின் போது, தமிழக அரசு 13,731 கோடி ரூபாய் கோரியது. ஆனால் மத்திய அரசு வெறும் ஆயிரத்து 940 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது.

இதேபோன்று, 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் பாதிப்புகளுக்காக, 22,573 கோடி ரூபாய் தமிழகம் கேட்டது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து கிடைத்ததோ 266 கோடி ரூபாய் மட்டுமே.

2015 சென்னை பெருவெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகள்


இதனைதொடர்ந்து வறட்சி நிவாரணப் பணிகளுக்காக 39,565 கோடி ரூபாய் வழங்கவேண்டுமென தமிழக அரசு கோரியதற்கு, வெறும் ஆயிரத்து 748 கோடி ரூபாய் வழங்கியது மத்திய அரசு.

எண்ணூர் துறைமுக எண்ணெய் கசிவு நிவாரணமாக 135 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டது, ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது.

2011-ம் ஆண்டு தமிழக கடலோரப் பகுதிகளை தாக்கிய தானே புயல் நிவாரணமாக தமிழக அரசு ரூ.5240 கோடி கேட்க, ரூ.500 கோடி மட்டுமே கிடைத்தது.

2018-ம் ஆண்டு தென்மாவட்டங்களை தாக்கிய கஜா ஒக்கி புயலுக்கு ரூ.5255 கோடி ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி


Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: