• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக பேரிடர் மேலாண்மை திட்டம் : தமிழக அரசு நடவடிக்கை

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக பேரிடர் மேலாண்மை திட்டம் : தமிழக அரசு நடவடிக்கை

சென்னை வெள்ளம் 2015

சென்னை வெள்ளம் 2015

தமிழ்நாட்டில் முதன்முறையாக மாவட்டங்களுக்கென பிரத்யேக பேரிடர் மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய விதம் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் உருவாக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டம், தாலுக்கா, கிராமம் அணைகள், நீர்நிலைகள், உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த பேரிடர் மேலாண்மை திட்டத்தில் உள்ளன. எதிர்பாராத விதமாக பேரிடர் வரும்பட்சத்தில் அதனை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக இருக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  பேரிடர் மேலாண்மை குழு, கண்காணிப்பு அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டதற்கான விவரங்களும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

மழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், பேரிடர் மேலாண்மைக்காக அரசு கொண்டு வந்த திட்டங்களின் செயல்பாடுகள், மழை வெள்ளக் காலங்களில் செய்யக்கூடியவை எவை, செய்யக்கூடாதவை எவை என்ற முழு விவரங்களும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Must Read : தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது... தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுரை

மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டம் 2021 ஐ தமிழக அரசு உருவாக்கி இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துளளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: