ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விடா முயற்சி.. உதவி பயிற்சி கலெக்டரான பார்வை குறைபாடுடைய கேரள இளைஞர்!

விடா முயற்சி.. உதவி பயிற்சி கலெக்டரான பார்வை குறைபாடுடைய கேரள இளைஞர்!

திருநெல்வேலி துணை மாவட்ட ஆட்சியர் கோகுல்

திருநெல்வேலி துணை மாவட்ட ஆட்சியர் கோகுல்

ல்லூரியில் படிக்கும் காலத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ஐஏஎஸ் அதிகாரிகள் கையாள்வதை நேரில் பார்த்தபோது அதில் ஈர்க்கப்பட்டு நாட்டுக்காக உழைக்கும் ஆசை வந்து குடிமைப்பணிக்கு படிக்க ஆரம்பித்ததாக கோகுல் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli |

திருவனந்தபுரம் திருமலையைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய ரேங்க் 3வது இடத்தைப் பெற்று திருநெல்வேலியில் உதவி கலெக்டருக்கான பயிற்சி பணியில் சேர்ந்துள்ளார்.

26 வயதான இவர் 2019 இல் தனது முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில் 804வது இடம் பிடித்தார். அந்த மதிப்பெண்ணும் ரேங்க்கும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அடுத்த ஆண்டும் முயற்சித்துள்ளார்.

சிறந்த ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற இலக்கில் கோகுல் மீண்டும், 2020ல் நடந்த தேர்வில் வெற்றி பெற்றார். ஆரம்ப கட்ட பயிற்சிகளை முடித்தவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி பயிற்சி கலெக்டராக கடந்த நவம்பர் 6 ஆம் தேதி பணியில் சேர்ந்தார்

இதையும் படிங்க : காட்டுத்தீ.. வெப்பக்காற்று.. 15,000 பேரை பலிவாங்கிய வெப்ப அலை.. ஷாக் தகவல்கள்!

2018ஆம் ஆண்டு அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ஐஏஎஸ் அதிகாரிகள் கையாள்வதை நேரில் பார்த்தபோது அதில் ஈர்க்கப்பட்டு நாட்டுக்காக உழைக்கும் ஆசை வந்து குடிமைப்பணிக்கு படிக்க ஆரம்பித்ததாக கோகுல் கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அவரை வரவேற்று, திருக்குறள் புத்தகம் பரிசளித்தார். கோகுலின் தந்தை சுரேஷ்குமார் என்.சி.சி., இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். தாய் ஷோபாகுமாரி பள்ளி ஆசிரியை. கோகுல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். பின்னர் பிஎச்.டி., பயின்றார். தன் வெற்றிக்கு பெற்றோர் மிகுந்த உறுதுணையாக இருந்ததாக கூறினார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Thirunelveli, UPSC