ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'விளக்கம் கொடுங்க' - மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய மருத்துவ இயக்குனரகம்!

'விளக்கம் கொடுங்க' - மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய மருத்துவ இயக்குனரகம்!

மருத்துவர் ஷர்மிகா

மருத்துவர் ஷர்மிகா

சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இணையத்தில் அவர் வெளியிட்டு இருந்த சிலர் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது தவறான தகவலை பரப்புகிறார் என்று புகார் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம் ஷர்மிகா சமீபகாலமாக கர்ப்பம் தரிப்பது உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Indian Medical Council, Medicine