• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA & NRC இந்துக்களுக்கும் எதிரானதுதான்... நம் மவுனம் ஆபத்தானது...! வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் வெற்றிமாறன்!

CAA & NRC இந்துக்களுக்கும் எதிரானதுதான்... நம் மவுனம் ஆபத்தானது...! வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் வெற்றிமாறன்!

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

  • Share this:
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 16 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இயக்குநர் வெற்றிமாறன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் போராட்ட மேடையில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் உள்ளிட்டவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல. நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்களுக்கு இச்சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும். அசாமில் தற்போது தடுப்பு முகாமில் உள்ளவர்களில் இஸ்லாமியர்களை விட இந்துகள் அதிகம். மக்களிடம் அச்சத்தை உருவாக்குகின்றனர். நாடு முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் நம் மவுனம் ஆபத்தானது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் சில ஆண்டுகளில் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாவோம். பிரிவினைக்கு நாம் ஆட்பட்டு விடக்கூடாது. பிரிவினையை மக்கள் அனுமதிக்க கூடாது. நமக்கான உரிமைகள் கேள்விக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.



அறப்போராட்டம் தான் தேவைகளை வென்றெடுக்கும் வழி. இதற்கு என் முழு ஆதரவு எப்போதும் இருக்கும். நாம் அனைவரும் இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இதை நாம் இவ்வாறு தான் எதிர்கொள்ள வேண்டும்," என்றார்.

வெற்றிமாறனைப் போல் இயக்குநர் பா.ரஞ்சித், அமீர் உள்ளிட்டோரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:வன்முறையை தூண்ட இது டெல்லி அல்ல; பெரியார் மண்...! வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் கி.வீரமணி பேச்சு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: