ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்- இயக்குநர் பேரரசு காட்டம்

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்- இயக்குநர் பேரரசு காட்டம்

பேரரசு

பேரரசு

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொறுக்கிகளை அக்னி பாத் திட்டம் அடையாளம் காட்டுகிறது, பொதுச் சொத்துகளை சேதம் விளைவிப்போர் மீதி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பேரரசு காட்டமாக பேசியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் யோகாசன பயிற்சிகள் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் கதிரவன், மாநிலச் செயலாளர் பாலகணபதி, யோகா தலைமைப் பயிற்சியாளர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய இயக்குனர் பேரரசு, ‘இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இளைஞர்களின் வேலையில்லாத பிரச்சனைகளை தீர்த்து தேசத்தின் மீது பற்று உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தை பல்வேறு சமூக விரோதிகள் எதிர்க்கின்றனர். அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள், பொறுக்கிகள் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களும், இளைஞர்களும் பங்கேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவை வளர்ச்சி அடையாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்திய குடிமகன்கள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்திருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உண்மையான உணர்வுள்ள இந்தியன் இந்த நாட்டை காக்க ஒன்றுசேர்ந்து வென்று காட்ட வேண்டும். இதை  எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களை அடையாளம் காட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published: