• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சட்டத்திற்கு உட்பட்டு போராடுகிறோம்; நிச்சயம் வெல்வோம் - CAA போராட்டக்களத்தில் பா.ரஞ்சித் பேச்சு

சட்டத்திற்கு உட்பட்டு போராடுகிறோம்; நிச்சயம் வெல்வோம் - CAA போராட்டக்களத்தில் பா.ரஞ்சித் பேச்சு

இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்

  • Share this:
CAA, NRC மற்றும் NPR-க்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், "சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் நான் தொடர்ந்து என்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன். சிறுபான்மை மக்களை ஒடுக்கும் செயலில் இந்த அரசு ஈடுப்பட்டு வருகிறது. சிறுபான்மையினரின் கருத்துகளை கேட்க கூடாது என பாசிச மனப்பான்மையில் உள்ளது. டெல்லியில்  நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தபட்டுள்ளது.

இந்த வன்முறை மக்களை பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சட்டத்தால் தடுக்க முடியாத போரட்டத்தை வன்முறையால் தடுக்க பார்க்கிறது அரசு.  தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்டு மிக பெரிய அளவில் போரட்டம் நடைபெற்றுள்ளது. பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன்.

அர்ஜுன் சம்பத் சாந்தோம் தேவாலயத்தில் இது யார் இடம் தெரியுமா என்று பேசியுள்ளார். இதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். அது ஒற்றுமை.



பாஜகவினர் அறிவித்த போராட்டத்தில் இங்குள்ள கூட்டத்தில் கால்வாசி கூட இல்லை. நாம் அம்பேத்கர் இயற்றியுள்ள சட்டத்திற்கு உட்பட்டு போராடுகிறோம். நிச்சயம் வெல்வோம். இங்குள்ள அரசுக்கு பாஜக மூளையாக  செயல்படுகிறது. குறைந்தபட்சம் பாண்டிச்சேரி போல  சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இஸ்லாமியர்கள் அதிமுகவில் அதிகளவில் உள்ளனர். வாக்கு வங்கியுள்ளது. இதையெல்லாம் புரிந்து கொண்டு பிரச்னையை தீர்க்க வேண்டும். எங்காவது ஒரு இடத்தில் இந்து முஸ்லீம் பிரச்னையை உண்டு பண்ன நினைக்கிறார்கள். அதற்குள் இதனை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.



டெல்லி கலவரம் போல இங்கு நடத்த நினைக்கிறார்கள். இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும். இது அனைத்து இந்தியர்களுக்குமான போராட்டம். தமிழக அரசு இங்குள்ள பெண்கள், குழந்தைகள் என அனைவரின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

சின்ன சின்ன குழந்தைகள் போராட்டத்தில் இருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழல் தமிழகத்தில் நடைபெற்றுவிடக்கூடாது. தொடர்ந்து உங்கள் போராட்டத்தில் பங்கேற்பேன். போரட்டத்தின் எதிரொலி சட்டமன்றத்தில் ஒலிக்கும் என நினைக்கிறேன்," என்றார்.

மேலும் படிக்க: CAA & NRC இந்துக்களுக்கும் எதிரானதுதான்... நம் மவுனம் ஆபத்தானது...! வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் வெற்றிமாறன்!


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: